உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தியாவின் அதிரடி: மங்களூரில் 13 மில்லியன் பீப்பாய் கொள்ளளவு கொண்ட புதிய எண்ணெய் கிடங்கு!

இந்தியாவின் Oil and Natural Gas Corporation (ONGC) நிறுவனம், மங்களூரில் 1.75 மில்லியன் மெட்ரிக் டன் (சுமார் 13 மில்லியன் பீப்பாய்) கொள்ளளவு கொண்ட தேசிய எண்ணெய் காப்பகம் (Strategic Petroleum Reserve-SPR) ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியா உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி நாடாகும். ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்ட தடைகள் காரணமாக, இந்தியா தனது எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

தற்போது இந்தியாவிடம் மங்களூர், படூர், விசாக் ஆகிய இடங்களில் 5.33 மில்லியன் டன் கொள்ளளவு கொண்ட எண்ணெய் சேமிப்பு கிடங்கு உள்ளது.

புதிய காப்பகம் தேசிய நலனுக்காக உருவாக்கப்படுவதோடு, வணிக பயன்பாட்டிற்கும் அனுமதி பெற திட்டமிடப்பட்டுள்ளது.

ONGC-யின் துணை நிறுவனம் Mangalore Refinery and Petrochemicals Ltd ஏற்கனவே மங்களூர் SPR-இன் ஒரு பகுதியை பயன்படுத்தி வருகிறது. மீதமுள்ள பகுதி Abu Dhabi National Oil Company (ADNOC)-க்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு, ஓடிசா மாநிலத்தில் 4 மில்லியன் டன் கொள்ளளவு கொண்ட SPR மற்றும் படூரில் 2.5 மில்லியன் டன் கொள்ளளவு கொண்ட புதிய காப்பகத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் இந்தியா எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரித்து வருகிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு வலுவடையும்.

Leave A Reply

Your email address will not be published.