பிரதமர் இன்று யாழ். விஜயம்!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கிலேயே அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்றார்.

இந்த நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளன.

அதேவேளை, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மஹோற்சவம் இடம்பெற்று வரும் நிலையில், பிரதமர் ஆலயத்துக்கு வருகை தந்து வழிபாடு செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.