மாணவர்கள், அரச அதிகாரிகள் முதல் பொலிஸார் வரை பாதிப்பு.
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு – பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத் திருவிழாவின்போது பயன்படுத்தப்பட்ட லேசர் ஒளிக்கீற்றுத் தாக்கம் காரணமாகக் கண்ணில் பாதிப்படைந்தவர்களில் இரண்டு பொலிஸாரும் அடங்குகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து 400 இற்கும் மேற்பட்டோர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் இரண்டு பொலிஸார், ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவிகள் உள்ளிட்ட பல மாணவர்கள், அரச அலுவலகர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் உள்ளடங்குகின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பண்டத்தரிப்பு – பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தின் உற்சவத்தின்போது ஆலயச் சூழலில் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்று வகைகள் பயன்படுத்தப்பட்டமையே இந்தக் கண் பாதிப்புக்கு முக்கிய காரணமாகும்.
