டெல்லியில் 42 நாட்களுக்கு கட்டுமானப் பணிகளுக்கு தடை: முதல்வர் ரேகா குப்தா அறிவிப்பு

புதுடெல்லி,

டெல்லியில் வரும் டிசம்பர் 10-ஆம் தேதி முதல் ஜனவரி 20-ஆம் தேதி வரை மொத்தம் 42 நாட்களுக்கு கட்டுமானப் பணிகளுக்கு முதல்வர் ரேகா குப்தா அதிரடியாக தடை விதித்தார்.

கட்டுமானப் பணிகளுக்கு தடை
டெல்லியில் குளிர்கால காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அடிக்கடி கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிப்பது வழக்கம். கடந்த காலங்களில் விதிக்கப்பட்ட தடைகளின் போது திரைமறைவில் கட்டுமானப் பணிகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இம்முறை விதிகளை மீறுபவர்களைக் கண்டறிய அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

இதையடுத்து வரும் டிசம்பர் 10-ஆம் தேதி முதல் ஜனவரி 20-ஆம் தேதி வரை மொத்தம் 42 நாட்களுக்கு அனைத்து விதமான கட்டுமானப் பணிகளுக்கும் முழுமையாகத் தடை விதிக்கப்படுவதாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா அதிரடியாக அறிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு கேமரா கண்காணிப்பு
500 சதுர மீட்டருக்கும் அதிக பரப்பளவு கொண்ட அனைத்து பெரிய கட்டுமானத் தளங்களும் ‘டஸ்ட் போர்டல்’ இணையதளம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் தீவிரமாகத் கண்காணிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அழைப்பு
அந்தத் தடையை மீறி ஏதேனும் பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றால், அது குறித்து பொதுமக்கள் டெல்லி மாநகராட்சி (எம்.சி.டி), தங்கள் பகுதி சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) அல்லது நேரடியாக முதலமைச்சருக்கு தகவல் தெரிவிக்கலாம் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.