களுத்துறையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை!
களுத்துறை, பயாகல – கொஸ்ஹேன பகுதியில் நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பயாகல – கொஸ்ஹேன பகுதியில் அமைந்துள்ள வீடொன்றுக்கு முன்பாக நேற்று இரவு இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த 28 வயது இளைஞர் உடனடியாக மீட்கப்பட்டு நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
