கொழும்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி விழா!
கொழும்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி விழா மாநகர சபை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்வாண்டு விழாவின் முக்கிய அம்சமாக, மாநகர சபை வரலாற்றில் முதன்முறையாக 12 நாள்கள் தொடர்ச்சியாக ஸுப்ஹான மௌலித் ஓதுதல் நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டமை மற்றும் பல்வேறு கஸீதா குழுக்களின் நபி புகழ் பாடல்கள் இந்த நிகழ்வுக்குச் சிறப்பைச் சேர்த்தன.












கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கேலி பால்தசார் மற்றும் பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்றப் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
கடந்த 2020ஆம் ஆண்டு மாநகர சபை உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் முன்வைத்த முன்மொழிவின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் மீலாதுன் நபி விழா, தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
