சூப்பர் எல்நினோ பேராபத்து: இந்தியாவில் 15,800 பேர் பலியாகும் அபாயம் – அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை!

புதுடெல்லி,

உலக நாடுகளை பெரும் பாதிப்பில் ஆழ்த்தி இருக்கும் சூப்பர் எல்நினோவின் தாக்கம், இந்தியாவில் பெரும் காலநிலை மாறுபாடுகளை உருவாக்கி இருக்கிறது. இது அடுத்த ஆண்டு (2027) பிப்ரவரி விரை நீடிக்கும் என உலக வானிலை ஆய்வமைப்பு கூறியுள்ளது.

வருகிற நாட்களில் இன்னும் வெப்பநிலை அதிகரித்து மோசமான நிலையை எட்டக்கூடும் எனவும், ஆண்டுதோறும் நிகழும் வழக்கமான பலி எண்ணிக்கையை விட கூடுதல் மரணங்கள் இந்த எல்நினோ தாக்கத்தால் ஏற்படும் எனவும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, ‘தெற்கு ஆசியாவில் எல்நினோவால் உருவாகும் கூடுதல் வெப்பத்தால் அடுத்த 6 மாதங்களில் பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா நாடுகளில் 19,400 இறப்புகள் நேரிடும். பிலிப்பைன்சில் 19,300-ம், இந்தியாவில் 15,800-ம் கூடுதலாக மரணங்கள் நிகழும். தென் அமெரிக்கா, பிரேசிலில் 13,300 பேரை பலி வாங்கும்’ என கூறப்பட்டு உள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்த மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை உலகம் முழுவதும் 2.3 லட்சம் கூடுதல் மரணங்கள் நிகழும் எனக்கூறப்பட்டுள்ள அந்த அறிக்கையில், நாடுகள் வாரியான விவரங்களையும் வெளியிட்டு உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.