மகாராஷ்டிரா கடற்கரையில் சோகம்: கடலில் மூழ்கி 8 மாணவர்கள் பரிதாப பலி!

மும்பை: மகாராஷ்டிராவின் ராய்​கட் மாவட்​டத்​தில் உள்ள டைவேகர் கடற்​கரை பிரபல சுற்​றுலாத் தலமாக விளங்குகிறது.

புனே மாவட்​டத்​தின் ஆலந்​தி​யில் செயல்​படும் தனி​யார் பயிற்சி மைய​மான வின்​னர்ஸ் அகாட​மியைச் சேர்ந்த 25 மாணவர்​கள், 17 மாணவி​கள் மற்​றும் 6 ஆசிரியர்​கள் என 48 பேர் கொண்ட குழு நேற்று மாலை இந்த கடற்​கரைக்கு சுற்​றுலா சென்​றது.

அப்​போது, அவர்​களில் 8 மாணவர்​கள் கடலில் இறங்​கினர். அவர்​களை கடல் அலை உள்ளே இழுத்​துச் சென்​றது.

இதுகுறித்து தகவல் கிடைத்​தவுடன், அந்த பகு​தி​யில் செயல்​பட்டு வரும் பிரபல தனி​யார் வாட்​டர் ஸ்போர்ட்ஸ் நிறு​வனத்​தின் உரிமை​யாளர் பாவ் சலுங்கே தனது குழு​வினருடன் உடனடி​யாக மீட்​புப் பணி​யில் ஈடு​பட்​டார்.

எனினும் அதற்​குள் மாணவர்​கள் 8 பேரும் நீரில் மூழ்கி பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். அவர்​களின் உடல்​களை மீட்​புக் குழு​வினர் மீட்​டனர்.

உயி​ரிழந்த மாணவர்​கள் அனை​வரும் 16 வயது சிறு​வர்​கள் என போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

இந்த சம்​பவம் தொடர்​பாக போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணையை தொடங்​கி​யுள்​ளனர்.

சுற்​றுலா ஏற்​பாடு செய்த கல்வி நிறு​வனத்​தால் பாது​காப்பு வழி​காட்​டு​தல்​களும் மேற்​பார்வை நெறி​முறை​களும் முறை​யாகப் பின்​பற்​றப்​பட்​டனவா என்​பது உள்பட அனைத்​தும் விரி​வாக விசா​ரிக்​கப்​படும் என போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர்​.

Leave A Reply

Your email address will not be published.