வரலாற்றுப் பாட ஆசிரியர் வீட்டிலிருந்து சடலமாக மீட்பு! – மரணத்தில் சந்தேகம்.
அம்பாந்தோட்டை மாவட்டம், பெலியத்தை பகுதியில் ஆசிரியர் ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பெலியத்தைப் பகுதியைச் சேர்ந்தவரும், இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான 31 வயதுடைய வரலாற்றுப் பாட ஆசிரியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எனினும், அவரது மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதால் பொலிஸார் சடலத்தை உடற்கூற்று ஆய்வுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
அத்துடன், உயிரிழந்தவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளிடமும் பொலிஸார் மேலதிக வாக்குமூலங்களைப் பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
