இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை: அதிவேக இணையம் வழங்கத் தயார் என எலன் மஸ்கின் நிறுவனம் அறிவிப்பு!

அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்க் செயற்கைக்கோள் தொடர்பான பல துறைகளிலும் முன்னிலையில் செயல்பட்டு வருபவர். ஒருபக்கம் அவரின் ஸ்டார்லிங்க் நிறுவனம் உலகமெங்கும் சேட்டிலைட் வழியாக இன்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது.

இந்தியாவிலும் ஸ்டார்லிங்க் நிறுவனத்தை நிறுவ எலன் மஸ்க் இந்திய அரசிடம் அனுமதி கேட்டு அவர் காத்திருக்கிறார்.

ஆனால், தற்போது வரை அனுமதி கொடுக்கப்படவில்லை.. இதனால் கோபமடைந்த எலன் மஸ்க் சில நாட்களுக்கு முன்பு ‘முகேஷ் அம்பானிதான் இந்தியாவின் முதலாளி என்பதை நான் தெரிந்து கொள்ள தவறி விட்டேன் அதற்காக என்னை மன்னித்து விடுங்கள்.. இந்தியாவில் ஸ்டார்லிங்க் இன்டர்நெட் சேவையை கொடுக்க விரும்புகிறேன்.. இதனால் ஜியோ நிறுவனத்திற்கு லாபம் குறையுமே தவிர நஷ்டம் ஏற்படாது.

போட்டி இருந்தால்தான் மக்களுக்கு பலன்கள் கிடைக்கும்.. இந்தியாவில் இன்டர்நெட் வசதி இல்லாத பல கிராமங்கள் இருக்கிறது. அங்கே ஏழை மாணவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு எங்கள் சேவை உதவும்.. எனவே ஸ்டார்லிங்க் சேவைக்கு அனுமதி கொடுங்கள்’ என பதிவிட்டிருந்தார்.

அதுதொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இரண்டு நாட்களுக்கு முன்பு ‘போட்டியை நாங்கள் வரவேற்கிறோம்.

அதேநேரம் இந்தியாவின் சட்ட திட்டங்களை மதித்து நடந்து கொள்ளுங்கள்’ என்று கூறியிருந்தது. இந்நிலையில், அதிவேக இணைய சேவை வழங்க தயாராக உள்ளதாக எலன் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக இது தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளோம்.. பயனர்களின் தரவுகளை உள்ளூரிலேயே பாதுகாப்பாக வைக்க பிரத்யேக கேட்வே மையங்களை அமைத்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.