தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் பெருமளவு பக்தர்கள் புடைசூழ சூரசம்ஹாரப் பெருவிழா!

கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் – வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் சூரசம்ஹார நிகழ்வு மிகச் சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.

கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு கடந்த ஆறு நாள்களாக ஆலயத்தில் விசேட பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் மற்றும் திருமுறைப் பாராயணங்கள் இடம்பெற்று வந்தன. விரதத்தின் நிறைவு நாளான நேற்று கந்தப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரப் பெருவிழாவைக் காண்பதற்காகப் பெருமளவான பக்தர்கள் ஆலய வளாகத்தில் திரண்டிருந்தனர்.

அதிகாலை முதலே மூலமூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதுடன், விரதமிருந்த அடியவர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வழிபட்டனர்.

மாலை வேளையில் ஆலய வெளிவீதியில் கந்தப்பெருமான் எழுந்தருளி, சூரபத்மனுடன் போரிட்டு வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு அரோகரா கோஷம் விண்ணதிர பக்திபூர்வமாக அரங்கேறியது.

இன்று திங்கட்கிழமை கந்தப்பெருமானின் திருக்கல்யாண உற்சவத்துடன் இந்த வருடத்துக்கான கந்தசஷ்டி விரத உற்சவங்கள் இனிதே நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.