கல்கிஸைக் கடலில் மூழ்கி இந்தியப் பிரஜை மரணம்!

கொழும்பு, கல்கிஸைப் பகுதியில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 43 வயதுடைய இந்தியப் பிரஜை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கடலில் நீராடிக்கொண்டிருந்த இந்த இந்தியப் பிரஜை திடீரென நீரில் மூழ்கியுள்ளார். உடனடியாகப் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் அவர் மீட்கப்பட்டு, களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கல்கிஸைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.