கள்ளக்குறிச்சி கலெக்டர் புகார் எதிரொலி: தவெக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு – ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்!

கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜாவுக்கு, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், அவரது அரசு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை கிளப்பின. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தவெக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ மீது மாவட்ட எஸ்பியிடம் கலெக்டர் புகார் அளித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது இந்த தகவலை அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக எம்.எல்.ஏவுக்கு எதிராக ஆட்சியரிடம் இருந்து புகார் பெறப்பட்டுள்ளதாகவும் இந்த புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் தலைமை வழக்கறிஞர், கலெக்டரிடம் விசாரித்த விவரங்களை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்தார். அப்போது எப்ஐஆரை ஆய்வு செய்த நீதிபதி, முதல் தகவல் அறிக்கை காவல்துறை இணையதளத்தில் இன்னும் பதிவேற்றம் செய்யவில்லையா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு இணையத்தில் பதிவேற்றம் செய்தால் வெளியில் கசிந்துவிட்டும் என்பதால் பதிவேற்றம் செய்யவில்லை என குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.