போர் நிறுத்தத்தை முறியடித்த ரஷ்யா : வெளியேற நினைத்த மக்களுக்கு மீண்டும் பிரச்சனை
உக்ரைன் துறைமுக நகரமான மரியுபோல் மற்றும் வோல்னோவ்கா நகரங்களில் போர் நிறுத்தம் நிறுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யப் படைகள் போர் நிறுத்தத்தை மதிக்கத் தவறியதால் போர் நிறுத்தம் நிறுத்தப்படுவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துறைமுக நகரமான மரியுபோல் மற்றும் வோல்னோவ்கா நகரங்களில் உள்ள அதிகாரிகள், வெளியேறியோரை வீடுகளுக்கு திரும்புமாறு ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பாக இருக்குமாறும் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, உக்ரைனின் தெற்கு பிராந்தியங்களை ரஷ்ய இராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு முயன்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போதைய சூழ்நிலையில், உக்ரைனில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்புக்கு முகங்கொடுக்கும் உக்ரைன் தலைநகர் கியெவ்வின் தலைவிதி இன்று சோகமானது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் பத்தாவது நாளை நெருங்கி வரும் நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி மீண்டும் மேற்குலகை விமர்சித்துள்ளார்.
குறிப்பாக நேட்டோ நாடுகள், உக்ரைன் வான்வெளியில் பறக்க தடை மண்டலத்தை அமல்படுத்துவதை ஆதரிக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.