விக்கியின் உரையை நீக்குமாறு கோர எவருக்கும் எந்த உரிமையும் இல்லை! – சம்பந்தி வாசு ஆவேசம்

“தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனின் கருத்துக்களை நாடாளுமன்ற ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை. அதற்காக அவரது நிலைப்பாட்டுக்கு இணங்க வேண்டிய தேவையும் இல்லை.”

– இவ்வாறு நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கைத் தமிழ் மக்களின் பூர்வீகம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து, அவரது தனிப்பட்ட நிலைப்பாடு. அதனைத் தெரிவிப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கின்றது. அதனை நாடாளுமன்றத்தில் தடுத்து நிறுத்த யாருக்கும் முடியாது. சபாநாயகரும் அதற்கு அனுமதி வழங்கி இருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் நாடாளுமன்ற ஹன்சாட்டில் பதிவாகி இருக்கின்றது. அதனை அதிலிருந்து நீங்குமாறு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை.

Leave A Reply

Your email address will not be published.