தேவா நிகழ்ச்சியில் பாட்ஷா வராம எப்படி.. மாஸ் என்ட்ரி கொடுத்த ரஜினிகாந்த்!

வந்தேன்டா பால்க்காரன்.. நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்.. அதான்டா இதான்டா அருணாச்சலம் நான்தான்டா என தனது மிரட்டலான இசை மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மாஸ் ஓப்பனிங் பாடலை கொடுத்த இசையமைப்பாளர் தேவாவின் தேவா The தேவா நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.

தமிழ் திரையுலகின் இன்றியமையாத இசையமைப்பாளர்களில் தேவாவுக்கென தனி இடம் எப்போதுமே ரசிகர்கள் இதயங்களில் நிறைந்துள்ளது.

தனது 72வது பிறந்தநாளை முன்னிட்டு இசைக்கச்சேரி நிகழ்ச்சியை சென்னையில் தேவா நடத்தி உள்ள நிலையில், பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தேனிசை தென்றல் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இசையமைப்பாளர் தேவா இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்களுக்காக இந்த ஆண்டு பிளாக்‌ஷீப் டீம் உடன் இணைந்து தேவா தி தேவா இசை நிகழ்ச்சியை சென்னையில் நடத்தி வருகிறார். #DevaTheDeva ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் முக்கிய பிளாக்பஸ்டர் படங்களான அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. இதுவரை 400 படங்களுக்கு மேல் பல்வேறு மொழிகளில் இசையமைத்துள்ளார். வந்தேன்டா பால்க்காரன்.. நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்.. அதான்டா இதான்டா அருணாச்சலம் நான்தான்டா ஓப்பனிங் பாடல்கள் எல்லாமே வேறலெவல் ஹிட்.

தேவாவின் பாடல்கள் என்றாலே அவரது காந்தக் குரல் அப்படியே ரசிகர்களின் மனதுக்குள் வந்து செல்லும். இந்நிலையில், தனது 72வது பிறந்தநாளை முன்னிட்டு தேவா தி தேவா எனும் இசை நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தி உள்ளார். அந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்கள் தேவாவின் தேனிசை மழையில் நனைந்துள்ளனர்.

வந்தேன்டா பால்காரன் என்பது போல மாணிக் பாட்ஷா ரஜினிகாந்த் அட்டகாசமாக நிகழ்ச்சிக்கு வந்து தேவாவை ஆறத்தழுவி தனது அன்பை வெளிபடுத்தினார். நிகழ்ச்சிக்கு ரஜினி வருகை தந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. தனது நண்பர்களுக்காக ஒரு போதும் விட்டுக்கொடுக்காமல் ஆஜர் ஆவது தான் ரஜினிகாந்தின் பெருந்தன்மை என்றும் தனது நண்பர் தேவாவுக்காக வந்திருப்பது சூப்பரான விஷயம் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ரஜினிகாந்த் அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் நிலையில், மீண்டும் இவர்கள் இருவரது கூட்டணியும் இணைய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற வைத்து வருகின்றனர். ரஜினியின் இன்ட்ரோ பாட்லையாவது தேவா பாட வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.