உலக கோப்பை கால்பந்து: நெதர்லாந்து-ஈக்வடார் ஆட்டம் சமனில் முடிந்தது.

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று இரவு 9.30 மணிக்கு தொடங்கிய குரூப்-ஏ லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து-ஈக்வடார் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 6வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கோடி காக்போ கோல் அடித்து தமது அணியை முன்னிலை பெறச் செய்தார்.

இதன் மூலம் முதல் பாதி ஆட்ட முடிவில் நெதர்லாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. 2வது பாதி ஆட்டத்தில் பதில் கோடி அடிக்க ஈக்வடார் வீரர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

49வது நிமிடத்தில் ஈக்வடார் வீரர் அன்னர் வலென்சியா ஒரு கோல் அடித்தார். இதையடுத்து இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. 

Leave A Reply

Your email address will not be published.