கடும் குளிரால், இரண்டு சிறு குழந்தைகள் இறப்பு!

கடும் குளிரால், இரண்டு சிறு குழந்தைகள் இறப்பு! – “கடுமையான குளிரில் இருந்து சிறு குழந்தைகளை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுங்கள்” நிபுணர் மருத்துவர்கள் கோரிக்கை.

இலங்கையை பாதித்துள்ள குளிர் காலநிலை காரணமாக கந்தளே பிரதேசத்தில் இரண்டு சிறு குழந்தைகள் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த குழந்தைகளில் ஒன்று கந்தளே ரஜஅல பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டரை மாதக் குழந்தையும் மற்றைய குழந்தை கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த மூன்று வயது சிறுவனும் ஆகும்.

இந்த இரண்டு குழந்தைகளும் நேற்று (09) அதிகாலை உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் ஒருவர் நுரையீரல் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடும் குளிரின் காரணமாக மூச்சு திணறல் காரணமாக மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த நாட்களில் நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக சிறு பிள்ளைகளுக்கு சுவாசக் கோளாறுகள் மற்றும் ஏனைய நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

எனவே, கடும் குளிரில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பெற்றோர்களிடம் சிறப்பு மருத்துவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.