அதிர வைக்கும் டெல்லி இளம்பெண்ணின் உடற்கூராய்வு முடிவுகள்!

ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை டெல்லியில் இரு சக்கர வாகனம் கார் மீது மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து 20 வயது மதிக்கத்தக்க அஞ்சலி என்ற நபர் காரில் சிக்கி பல கிலோமீட்டர்கள் இழுத்துச் செல்லப்பட்டு பலத்த காயங்களோடு மரணித்தார். அவரது உடலை உடற்கூராய்வு செய்ய டெல்லி மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரிக்கு (எம்ஏஎம்சி) அனுப்பி வைக்கப்பட்டது. அஞ்சலியில் தாயார் தனது மகளின் ஆடைகள் எல்லாம் கிழிந்த நிலையில் இருந்தது. அதனால் பாலியல் வன்கொடுமையாக இருக்கலாம் என்று சந்தேகித்து காவல் துறையிடம் தெரிவித்தார்.

இதையடுத்து மருத்துவக் குழு அஞ்சலியின் பிரேதப் பரிசோதனையை நடத்தியது. அதன் 8 பக்க அறிக்கையை டெல்லி காவல்துறைக்கு அனுப்பியது. அதில் அஞ்சலியின் உடலில் ஏராளமான காயங்கள் இருப்பதை தெரிவித்தது. ஆனால், அவரது பிறப்புறுப்பில் எந்தவித காயங்களும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப் படவில்லை என்பது உறுதியானது. MAMC அறிக்கைப்படி, அஞ்சலி சுமார் 10 கிலோமீட்டர் இழுத்துச் செல்லப்பட்டதில் அவருக்கு தலை, முதுகு தண்டு பலமாக அடிபட்டு தெரிந்துள்ளது. நீண்ட தூரம் உடல் இழுத்து செல்லப்பட்டதால் சாலையில் தேய்ந்து அவரது மூளை உட்பகுதி, மார்பின் பின்புற விலா எலும்புகள் மற்றும் மார்பு விலா எலும்புகள் அனைத்தும் தேய்ந்துள்ளது. மூளையின் சில பகுதிகளே காணவில்லை என்கிறது மருத்துவ குழு.

சாலையில் இழுத்துச் சென்ற போது மண்டை ஓடு உரசி தேய்ந்து உள்ளே உள்ள பகுதிகள் சில காணாமல் சென்றுள்ளது. மண்டை ஓடு திறந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதே போல் முதுகுத்தண்டில் எலும்புகள் தேய்ந்து கூர்மையாக மாறியுள்ளன. மேலும் முதுகுத்தண்டில் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல் முழுவதும் சேறு மற்றும் அழுக்கு படிந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலை, முதுகுத்தண்டு, இடது தொடை, மற்றும் இரு கைகால்களிலும் முன்பொருந்திய காயத்தின் விளைவாக அதிர்ச்சி மற்றும் ரத்தக்கசிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சில காயங்கள் அஞ்சலி இறப்பதற்கு முன்னும், சில காயங்கள் அவர் இறக்கும் போதும், சில காயங்கள் அவர் இறந்த பின்னும் ஏற்பட்டுள்ளது.

சில காயங்கள் ஏற்பட்டு அதன் மீது சேறு, குப்பை படித்ததால் கருமையாக மாறியுள்ளது. அதற்கு அடியில் கூட சில சின்ன சின்ன காயங்கள் இருந்துள்ளன.அனைத்து காயங்களும் கலந்துள்ளன. இந்த காயங்கள் தந்த வலியால் தான் அஞ்சலி இறந்திருக்கக்கூடும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

அவளது மூளைப் பகுதி, மண்டை ஓடு, முதுகுத்தண்டு , கை, கால் என மொத்தம் 40 காயங்கள் இருந்துள்ளன. இரசாயன பகுப்பாய்வுக்கு உள்ளுறுப்புகள், இரத்தம் படிந்த காஸ் துண்டு, மற்றும் பாதிக்கப்பட்டவரின் கிழிந்த ஜீன்ஸ் பெயிண்ட் ஆகியவற்றைப் பாதுகாத்துள்ளதாக மருத்துவ வாரியம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.