ரஜினி மட்டுமே சூப்பர்ஸ்டார். மீசை ராஜேந்திரன்.

ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான மீசை ராஜேந்திரன் சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினிக்கு மட்டுமே சொந்தமானது என்று
தனது பேட்டியில் பேசியுள்ளார்.

2.0 படம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் 800 கோடி வசூல் செய்து மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்துள்ளார் என்றும் நடிகர் விஜய் படங்கள் இன்னும் 187 கோடி வசூலை கூட தாண்டவில்லை என்றும் பேசியுள்ளார்.

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்” என ரஜினிகாந்த் படத்தில் இடம்பெறும் பாடல் போல தமிழ்நாட்டை தாண்டி பல பாலிவுட் பிரபலங்களே சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் தான் என பல பேட்டிகளில் கூறியுள்ளனர். நடிகர் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் ரஜினிகாந்த்தின் நடிப்பு மற்றும் ஸ்டைலை பின்பற்றி பல படங்களில் நடித்துள்ளனர்.

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் பேசும் போது விஜய் தான் இன்றைய சூப்பர் ஸ்டார் என பேசியது ரஜினிகாந்த் ரசிகர்களை பயங்கர கோபத்தில் ஆழ்த்தியது. சரத்குமாருக்கு எதிராக கண்டனங்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். அஜித் ரசிகர்களும் ரஜினிகாந்துக்கு ஆதரவாக என்றுமே தலைவர் தான் நம்பர் ஒன் அதன் பின்னர் தான் அஜித், விஜய் எல்லாம் என பேசி வருகின்றனர்.

முன்னாள் சூப்பர்ஸ்டார் என ரஜினிகாந்த் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பிஸ்மி பேசியது மேலும், ரஜினிகாந்த் ரசிகர்களை கொந்தளிக்க செய்தது. புத்தாண்டு தினத்தன்று பிஸ்மியின் அலுவலகத்திற்கே சென்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்தின் சிவாஜி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக மீசை ராஜேந்திரன் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு விஜய் ஆசைப்படலாமா என விளாசியுள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படம், விக்ரம் படங்கள் எல்லாம் கூட கடந்த ஆண்டு வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தாலும், ரஜினிகாந்தின் 2.0 படைத்த 800 கோடி இண்டஸ்ட்ரி ஹிட்டை முறியடிக்கவில்லை. அப்படியொரு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து விட்டு பின்னர் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படுங்க விஜய் என பேசி உள்ளார்.

விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களே 200 கோடிக்கும் அதிகமான வசூல் என சொல்லப்பட்டு வரும் நிலையில், சர்கார் படம் தான் அதிகப்படியாக 187 கோடி வசூல் செய்துள்ளது. வேற எந்த படமும் விஜய்க்கு பெரிய வசூல் சாதனையை கொடுக்கவில்லை. 800 கோடி இண்டஸ்ட்ரி ஹிட் காட்டிட்டு அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி பேசலாம் என்றும் எப்போதுமே ரஜினிகாந்த் தான் ஒரே சூப்பர்ஸ்டார் என்றும் அவர் பேசி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.