நீங்க வந்ததும் உங்க வேலையை ஆரம்பிக்காதீங்க.. மகேஷ்வரியை சாடிய அசீம்.

பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதில் தற்போது 7 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 96 நாட்களை நெருங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சி முடிவடையும் நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்து வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில், மகேஷ்வரி வீட்டிற்குள் வருகிறார். அப்போது கவுஸ் மேட்ஸ் அனைவரும் கலந்து பேசி ஒரு சாக்ரிஃபைஸ் டாஸ்க் விளையாட வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார். இதற்கு தனலட்சுமி விக்ரமனுக்கு ஒரு பகுதி தாடியை எடுத்து விட வேண்டும் அசீம் அண்ணா சாரி அல்லது சுடிதார் இந்த இரண்டு உடைகளில் எதாவது ஒன்றை அணிய வேண்டும் என்று கூறுகிறார்.

இதற்கு அசீம் இது வந்து கீழ போனும் என்பது போல் இருக்கிறது என்று சொல்கிறார். இதற்கு மகேஷ்வரி சாரி அல்லது சுடிதார் அணிந்தால் கீழ போனும் அப்படீனு அர்த்தம் இல்லை என்று கூறுகிறார். வந்ததுமே உங்க வேலையை ஆரம்பிக்காதீங்க என்று மகேஷ்வரியை அசீம் கத்துகிறார்.

இதற்கு மகேஷ்வரி நான் பெருக்கு, தொடைக்கதுக்குலாம் வரல இதுக்கு தான் வந்துருகேன் என்று சொல்கிறார். அதற்கு அசீம் அதுக்கு தான் நீங்க வெளியவும் போனீங்க பேசாம உட்காருங்க என்று சொல்கிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. எப்படியோ பிக்பாஸ் வீட்டில் ஒரு கலவரம் உருவாக போவது உறுதி என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.