ரணில் யாழ். விஜயம்: உத்தியோகத்தர்களுக்கு இரவிரவாக குடைச்சல்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை பொங்கல் விழாவுக்காக யாழ்ப்பாணம் வருகை தருவதால் கடற்றொழில் அமைச்சரும், வடக்கு ஆளுநரும் அரச உத்தியோகத்தர்களை இரவு, இரவாக அழைத்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

அமைச்சர் மாவட்ட செயலகத்தில் நேற்றிரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணிவரை உத்தியோகத்தர்களை அழைத்து விவரத்தைக் கேட்டறிந்தார்.

இதே விபரங்களையும் வேறு சில விடயத்தையும் இரவு 8.30 மணியில் இருந்து 10 மணியும் தாண்டிய நிலையில் ஆளுநர் கேட்டறிந்தார்.

ஆளும் அரசு ஒன்றாக இருந்தும், இரவில் தனித்தனியாக அழைத்து உயிர் போகின்றது எனச் சலித்துக்கொண்டனர் உத்தியோகத்தர்கள்.

Leave A Reply

Your email address will not be published.