முன்னாள் காதலியைக் கடத்திச் சென்ற திருமணமான கடற்படைச் சிப்பாய்!

மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் இளம் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலென்வத்த பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் பிலியந்தலைப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடத்தலை மேற்கொண்ட சந்தேகநபர் மதவாச்சி பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான கடற்படைச் சிப்பாய் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட யுவதியுடன் சந்தேகநபர் காதல் தொடர்பு வைத்திருந்தார் எனவும், பின்னர் அதனை 6 மாதங்களுக்கு முன்னர் நிறுத்தினார் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடத்தப்பட்ட யுவதிக்குச் சந்தேகநபர் பல சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல் விடுத்திருந்தார் எனவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், கடத்தல் தொடர்பில் பிலியந்தலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.