பாகிஸ்தானில் வாலிபர் தலையை துண்டித்து கொன்ற பயங்கரவாதிகள்.

பாகிஸ்தானில் அவ்வப்போது ஆப்கானிஸ்கானை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறி வைத்து அவர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தங்கள் இயக்கத்தை பற்றி பாகிஸ்தான் ராணுவத்திற்கு துப்பு கொடுத்ததாக வாலிபர் ஒருவரை ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் தலையை துண்டித்து கொடூரமான முறையில் கொன்றனர்.

வடமேற்று கைபர் பார்கை என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரஷித்துல்லா (வயது 17) சம்பத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு பகுதிகளில் தேடினார்கள். ஆனால் அவரை பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை. இது பற்றி போலீசிலும் அவர்கள் புகார் கொடுத்தனர். இந்த சூழ்நிலையில் அடர்ந்த காட்டுப்பகுதியில் ரஷித்துல்லா தலை துண்டிக்கபட்டு பிணமாக கிடந்தார்.

அவர் அருகே பயங்கரவாதிகள் எழுதிய துண்டு சீட்டும் கிடந்தது. அவர் பயங்கரவாதிகள் குறித்து பாகிஸ்தான் ராணுவத்திற்கு தகவல் கொடுத்து வந்தததால் ஆத்திரம் அடைந்த பயங்கரவாதிகள் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.