யாழ் போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக நடந்த முதலாவது சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பி.சத்தியமூர்த்தி இன்று (22) தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஜனவரி 18 ஆம் திகதி யாழ்.மாவட்டத்தில் வசிக்கும் 17 வயதான யுவதிக்கு அவரது தாயாரால் வழங்கப்பட்ட சிறுநீரகம் பொருத்தப்பட்டதாகவும், சிறுமி தற்போது நலமுடன் இருப்பதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை பணிப்பாளரின் மேற்பார்வையில் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் தம்பிப்பிள்ளை தலைமையிலான வைத்திய குழுவினரால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இதுவாகும்.

இதனால் எதிர்காலத்தில் வடக்கில் உள்ள சிறுநீரக நோயாளர்களுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சை செய்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு யாழ் போதனா வைத்தியசாலையின் ஆட்சி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.