தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்?

இன்னும் சில தினங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக அரசியலமைப்பு பேரவை புதன்கிழமை (25) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

இது தவிர ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் அடுத்த சில நாட்களில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

அரசியலமைப்பு பேரவைக்கு பிரதான எதிர்க்கட்சியல்லாத ஏனைய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் நியமிக்கப்படவில்லை எனவும், இது தொடர்பில் புதன்கிழமை நடைபெறும் கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்பு சபைக்கான மூன்று சிவில் பிரதிநிதிகள் அண்மையில் நியமிக்கப்பட்டனர்.

இருபத்தியோராம் அரசியலமைப்பு திருத்தத்தின் விதிகளின்படி அரசியலமைப்பு சபை நிறுவப்பட்டது. புதிய அரசியலமைப்பு சபை நியமிக்கப்பட்டதன் பின்னர், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு மீண்டும் நிறுவப்பட வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.