வாழைச்சேனையில் கோர விபத்து – 2 பேர் பலி… 04 பெண்கள் ஆபத்தான நிலையில்…

நேற்று (24) மாலை 6.00 மணியளவில் பொலன்னறுவை மட்டக்களப்பு பிரதான வீதியின் வாழைச்சேனை ரிதிதென்ன பிரதேசத்தில் வான் ஒன்றும் , தனியார் பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் வானின் 80 வயதுடைய சாரதியும் , 4 மாத ஆண் குழந்தையும் உயிரிழந்துள்ளனர் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிலாபம் , புத்தளம் வீதி, இலக்கம் 72/1 என்ற முகவரியில் வசித்து வந்த அப்துல் மொஹமட் நவ்பர் என்பவரே விபத்தில் உயிரிழந்தவர் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புத்தளத்திலிருந்து , காத்தான்குடியை நோக்கிச் சென்ற வான், அக்கரைப்பற்றில் இருந்து கதுருவெல நோக்கி வந்து கொண்டிருந்த பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குளானதாகவும் , வானை ஓட்டி வந்த சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் , விபத்துடன் தொடர்புடைய தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்
.

விபத்தில் காயமடைந்த நான்கு பெண்களும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் புத்தளம் வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வாழச்சேனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் லசந்த பண்டார உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.