வசந்த முதலிகேவுக்கு விடுதலை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை வழங்கினார்.

பிந்திய இணைப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேவுக்கு பொருந்தாது என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் அறிவித்து அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளை தவறாகப் பயன்படுத்துவதற்கான ஆதாரங்களை அரசுத் தரப்பு உருவாக்கியுள்ளது என நீதவான் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சுமார் 7 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முதலிகே விடுவிக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.