சக மருத்துவரின் தொல்லை தாங்க முடியமால் இளம் பெண் மருத்துவர் தற்கொலை!

தன்னுடன் வேலை பார்த்த சக மருத்துவர் புகைப்பிடிக்கச் சொல்லியும், மது அருந்த சொல்லியும் கொடுமைப்படுத்தியதாகக் கூறி பெண் மருத்துவர் தற்கொலை செய்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த இளம்பெண் பிரியங்ஷி திரிபாதி. இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இவருடன் பணி புரியும் சக மருத்துவரான சுமித் பெண் மருத்துவரை தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். தன்னை காதலிக்க வேண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பெண் மருதத்துவர் பிரியங்ஷியை சுமித் தொல்லை செய்த நிலையில், பெண் மருத்துவர் காதலை தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். அத்தோடு பெண் மருத்துவரை புகைப்பிடிக்க வேண்டும், மது அருந்த வேண்டும் எனக் கூறியும் சுமித் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

சுமித்தின் பேச்சுக்கு பெண் மருத்துவர் செவி கொடுக்காததால் ஆத்திரத்தில், பெண்ணின் நடத்தையை பற்றி சுமித் அவதூறு பரப்ப தொடங்கியுள்ளார். சக ஊழியர்கள் மத்தியில் தரக்குறைவாக பேசியதால் மனமுடைந்து போன பெண் மருத்துவர், அதை தாங்க முடியாமல் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சஞ்சய் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.