போதை மாத்திரைகளை விழுங்கிய நபர் மரணம்

போதைப்பொருளை மையமாக கொண்ட 13 உருண்டைகளை விழுங்கிய சந்தேக நபர் ஒருவர் களுபோவில வைத்தியசாலையில் உயிரிந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளர்.

பிலியந்தலை – மாகந்தன பகுதியை சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழிந்துள்ளார்.

கடந்த 8 ஆம் திகதி பண்டாரகம – பிலியந்தலை வீதியிலுள்ள தொரணவில சந்தியில் முச்சக்கர வண்டியில் சென்ற ஒருவர் குறித்த நபருக்கு (மரணித்தவர்) பொதி ஒன்றினை வழங்கியதனை வீதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அவதானித்துள்ளார்.

பின்னர் சந்தேகமடைந்த பொலிஸார் முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்ததனையடுத்து மற்றையவர் தப்பிச்செல்ல முயற்சித்துள்ளார்.

தப்பிச்செல்ல முற்பட்டவர் கைவசமிருந்த போதைப்பொருள் உருண்டைகளை விழுங்கியதனை அடுத்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மரண பரிசோதனையின் போது, உயிரிழந்தவரின் வயிற்றிலிருந்து 13 போதைப்பொருள் உருண்டைகள் மீட்டகப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Comments are closed.