கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 30 பேர் தனிமைப்படுத்தலில்…

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 30 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக முன்னிலை சோசலிச கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக சென்றவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அத்திட்டிய தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு இவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு – கொள்ளுபிட்டியிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் நேற்று முன்தினம் (09) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, சமூக இடைவௌி பேணப்படாது, முகக்கவசம் அணியாது செயற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்துமாறு சுகாதார தரப்பினரால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Comments are closed.