புலம்பெயர் தொழிலாளர்களை கண்காணிக்க நோடல் குழு அமைப்பு

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த வதந்திகள் தொடர்பான பிரச்சினைகளில் மற்ற மாநிலங்கள் மற்றும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்க, ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட “நோடல் குழு” உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த ஆய்வு கூட்டம் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் குறித்தும், தொழிலாளர்களின் பெயர், வயது, பாலினம் மற்றும் அவர்களின் சொந்த ஊர் குறித்தும் தகவல்களை காவல்துறை சேகரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிர்வாகம் ஐஜி அவிநாஷ்குமார் ஐபிஎஸ், தலைமையகம் டிஐஜி அபிஷேக் தீக்‌ஷித் ஐபிஎஸ், சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையர் ஹர்ஷ் சிங் ஐபிஎஸ், IPREC SP ஆதர்ஷ் பச்சேரா ஐபிஎஸ், சண்முகப்பிரியா ஐபிஎஸ் ஆகிய ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட நோடல் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த “நோடல் குழுவானது” தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த தவறான பிரச்சாரங்கள் மற்றும் வதந்திகள் தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாக மற்ற மாநிலங்களின் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தகவல்களை திரட்டும்.மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த வதந்திகள் பரப்புவோர் குறித்து நோடல் குழுவானது தீவிரமாக கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.