2020 பொதுத்தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்காக 04 நாட்கள்

பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்காக 04 நாட்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெவிவித்துள்ளது.

இதனடிப்படையில் ஜூலை மாதம் 13,14,15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தபால்மூல வாக்களிப்பு தொடர்பான செயன்முறை மற்றும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

2020 பொதுத்தேர்தல் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.