வகை அறியப்படாத உயிரினம் சீனாவிலிருந்து இறக்குமதி

சீனாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கனரக வாகனமொன்றிலிருந்து வகை அறியப்படாத உயிரினமொன்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக குறித்த வாகனத்தை இறக்குமதி செய்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து மேல் மாகாண வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு குறித்த தனியார் நிறுவனம் தகவல் அளித்துள்ளதனை அடுத்து குறித்த உயிரினம் வனஜீராசிகள் திணைக்களத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களம் நேற்றைய தினம் நீதிமன்றத்திற்கு இது குறித்தான அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.

பெயர் தெரியாத உயிரினத்தின் வகையை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் அதேவேளை குறித்த உயிரினம் விரைவில் தெஹிவலை மிருகக்காட்சிசாலைக்கு ஒப்படைக்கப்படுமென வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments are closed.