இது பௌத்த சிங்கள நாடு! – மீண்டும் இனவாதம் கக்கும் விமல்.

“இந்த நாட்டில் தமிழர்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் பௌத்த மதத்துக்கும் – சிங்கள இனத்துக்கும் உரியவை என்பதைத் தமிழர்களும் அவர்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ள உறுப்பினர்களும் கவனத்தில்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படைத் தரப்பினராலும் தொல்பொருள் திணைக்களத்தினராலும் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இது பௌத்த சிங்கள நாடு. இப்படி இருக்கும் போது நாட்டின் எந்தப் பகுதியும் தமிழருக்குச் சொந்தமானவை அல்ல. இன, மத, பண்பாட்டு, கலாசார ரீதியில் எதையும் உரிமை கோரத் தமிழருக்குத் தகுதி இல்லை.

தமிழர் வாழும் பகுதிகளை பௌத்தர்கள் – சிங்களவர்கள் அபகரிக்கின்றார்கள் என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த நாட்டில் தமிழர்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் பௌத்த மதத்துக்கும் – சிங்கள இனத்துக்கும் உரியவை என்பதைத் தமிழர்களும் அவர்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ள உறுப்பினர்களும் கவனத்தில்கொள்ள வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.