மியாமி ஓபன் டென்னிஸ் – பெட்ரா கிவிடோவா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் செக் குடியரசின் பெட்ரா கிவிடோவா, ரொமானியா வீராங்கனை சொரானா சிர்ஸ்டியுடன் மோதினார்.

இதில் கிவிடோவா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ரிபாகினாவுடன், கிவிடோவா மோதுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.