சீர்காழியில் தோண்ட தோண்ட கிடைத்த ஐம்பொன் சிலைகள்..!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழமை வாய்ந்த சட்டநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக கோவில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் யாகசாலை அமைப்பதற்காக கோவிலின் உட்புறத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் மண் எடுக்க பள்ளம் தோண்டப்பட்டது.

அப்பொழுது வெறும் 2 அடி ஆழத்தில் புதைத்திருந்த ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, சோமஸ்கந்தர், அம்பாள், பூரண புஷ்பகலா அய்யனார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 22 சிலைகளும், 55 பீடம் மற்றும் 100க்கும் மேற்பட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த செப்பேடுகள் அனைத்தும் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற சீர்காழி பதிகம் தாங்கிய தேவார செப்பேடுகள் என கூறப்படுகிறது. இந்த திருக்கோவில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானது என்றதால் அப்பகுதிக்கு விரைந்த அனைத்து சிலைகளையும் பார்வையிட்டார். மேலும் சீர்காழி தாசில்தார், இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பெயரில் சிலைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.