லண்டனில் , சமுத்திரனின் 4 நூல்களின் அறிமுகமும் கலந்துரையாடலும்…

எதிர்வரும் சனி ( 29 ஏப்ரல் – மாலை )
இலங்கையின் கடந்த 50 வருட அரசியல் , சமூக நிலைமைகளை முன் வைத்து , கல்வியலாளர், அரசியல் செயற்பாட்டாளர் சமுத்திரனின் எழுத்துக்களை கொண்ட 4 நூல்களின் அறிமுகமும் கலந்துரையாடலும்…

ஈடுபாடும் ஆர்வமுள்ள அனைவரையும் அழைக்கப்படுகிறார்கள்.

உரையாளர்கள்
*பேராசிரியர் எம். ஏ. நுஃமான்
*Dr எம். எஸ் . தம்பிராஜா
*பேராசிரியர் சி. மெளனகுரு
*கல்வியலாளர் மு. நித்தியானந்தன்
* அரசியல் செயற்பாட்டாளர் – தோழர் வேலு
* சமூக செயற்பாட்டாளர்- எப். எம். பாயிஸ்
* நூலாசிரியர் – என். சண்முகரத்தினம்

வழிப்படுத்தல்- பால சபேசன்

காலம்- 29 ஏப்ரல் 2023 சனி
மாலை 4.30 மணி
TRINITY CENTRE
EAST AVENUE
EASTHAM – LONDON
E12 6SL

இலங்கையின் சமூக அரசியல் பொருளாதார விடயங்களில் ஈடுபாடு கொண்டவர்களும், இத்துறைகளில் கற்பித்தல், கற்றல் செயற்பாடுகளில் உள்ளோரும், பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் , அரசியல் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் தொகுதி இது!

இவை பேராசிரியர் என். சண்முகரத்தினத்தின் எழுத்துக்கள் என்பதற்கும் அப்பால், கடந்த 50 வருட இலங்கையின் சமூக, அரசியல் , பொருளாதார நிலைகளையும் அதனுடன் தொடர்புபட்ட சர்வதேச நிலைமைகளையும் போக்குகளையும் கருத்துநிலைகளையும் முன்னிருத்திய நூல்கள் இவை!

தொடர்புகளுக்கு
Vimbam k.k. Raja- 07736 908421
( mob , whatsup)
பதிப்பாளர் பெளசர்
0044 7817262980 ( mob , whatsup)
நூலின் உள்ளடக்க விபரம்…..

நூல் 01:

இலங்கை:
– மீள் சிந்திப்பிற்கான சில முன்மொழிவுகள்!
இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினை பற்றிய இந்நூலின் கட்டுரைகள், பௌத்த சிங்கள பெருந்தேசியவாதம், தமிழ்த் தேசியவாதம், தமிழர் விடுதலைப் போராட்டம் பற்றிப் பேசுகின்றன.

நூல் 02:
சர்வதேச அரசியல், பொருளாதாரம்

உலகமயமாக்கல், நவதாராளவாதம், ‘1917 ஒக்ரோபர் புரட்சி, கடன் ஏகாதிபத்தியம், மூலதனம், முதலாளித்துவத்தின் எதிர்காலம், இயற்கை- சூழலியல் சார்ந்த மார்க்சிய அணுகுமுறைகள், செல்வந்த நாடுகளின் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகளும் ஜனநாயகச் சிதைவுகளும், மார்க்சியத்தின் இன்றைய பயன்பாடு, கொரோனாப் பேரிடரின் அரசியல் பொருளாதாரப் பரிமாணங்கள் பற்றிய பேசுபொருட்களைக் கொண்டுள்ள கட்டுரைகள் இந்நூலின் மையப்பொருளாக உள்ளன. கோட்பாட்டு ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் மார்க்சிய நோக்குநிலையிலும் விமர்சன அணுகுமுறையிலும் அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

நூல் 03:
கலை, இலக்கியம், சமூகம், அரசியல்
– விமர்சனப் பார்வை

அவர் எழுதிய கலை இலக்கியப் பார்வைகளும் விமர்சனங்களும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கால அளவில் ஒன்றுக்கொன்று பெரும் இடைவெளி கொண்டவை இக்கட்டுரைகள் எனும் போதும், ஈழ மற்றும் புலம்பெயர் கலை இலக்கியப் போக்கில் நிகழ்ந்த மாற்றங்களை இவற்றினூடாக உணர்ந்து கொள்ள முடியும்.

நூல் 04:
இலங்கை தேசிய இனப் பிரச்சினை

சிங்கள பெருந்தேசிய இனவாதத்தின் அடிப்படைகளும் மேலாதிக்கமும்
சிங்களப் பெருந்தேசியவாதம் நிறுவனமயப்பட்டமைக்குப் பின்னால் உள்ள அரசியல் வரலாற்றினையும் சமூக-பொருளாதார அம்சங்களையும் ஆராய்கின்றது இந்நூல். இனவாதம் மேலாதிக்க நிலையை அடைந்த அக-புற நிலைகளை விளக்குகின்றது. நிறுவனமயப்பட்ட ஒரு கருத்தமைவாகவும் (ideology) அதன் அம்சங்கள் பேசப்படுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.