12 மணி நேர வேலை சட்ட மசோதா வாபஸ்: முதல்வர் அறிவிப்பு

12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் திமுக கூட்டணி கட்சிகளும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சென்னை சிந்தாந்திரிபேட்டை யில் மே தின நிகழ்ச்சி கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 12 மணி நேர வேலை மசோதா திரும்ப பெறப்பட்டதாக அறிவித்தார். மேலும் மசோதா திரும்பப் பெறப்பட்டது பற்றி எம்எல்ஏக்களுக்கு செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

மேலும் 12 மணி நேர வேலை மசோதா குறித்து விளக்க அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வட, தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்த 12 மணி நேர வேலை மசோதா கொண்டு வரப்பட்டது என்றார்.பெரும் முதலீடுகளை ஈர்க்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தரவுமே மசோதா கொண்டு வரப்பட்டது என பேசிய முதலவர் மு.க.ஸ்டாலின் 12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப் பெற்ற பின்னரும் அவதூறு பரப்பி வருவதாக குற்றச்சாட்டினார்.

விட்டுக்கொடுப்பதை அவமானமாக நினைக்கவில்லை என்றும் அதனை பெருமையாக கருதுகிறேன் என்றும் சட்டத்தை கொண்டு வரும் துணிச்சலும் அதை திரும்ப பெறும் துணிச்சலும் எங்களுக்கு உள்ளது என்றார். திமுக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை சட்டத்தை திமுக தொழிற்சங்கமே எதிர்த்ததை பாராட்டுகிறேன் என்றும் திமுக ஐனநாயக இயக்கம் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.