ஆளுநர்களை பதவி விலக அறிவிப்பு.

சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் போது ஆளுநர்கள் பதவி விலகுவது வழமையான நடைமுறை எனவும் அது இம்முறை கடைப்பிடிக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அந்த மரபு நிறைவேற்றப்படவில்லை எனவே ஜனாதிபதி, ஆளுநர்கள் பதவி விலகுவதற்கு நீண்ட காலம் காத்திருந்தார்.

இந்த அறிவிப்பின் அடிப்படையில் ஆளுநர்கள் பதவி விலகிய பின்னர் புதிய ஆளுநர்களை நியமிக்க ரணில் விக்கிரமசிங்க ஏற்பாடு செய்வார் என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.