பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்காதீர்! – அரசைச் சாடுகின்றார் சஜித்.

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மைக்காலமாக திடீரென மதப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. இதன் பின்னணி மர்மமாகவே உள்ளது.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கு – கிழக்கில் இன, மத ரீதியில் தொடரும் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படவேண்டும். இந்து ஆலயங்கள், விகாரைகள் ஆகியவற்றை வைத்து, அரசியல் நடத்த எவருக்கும் உரித்து கிடையாது.

மத ரீதியிலான பிரச்சினைகளை அரசு சம்பந்தப்பட்ட இரு தரப்பினருடனும் பேசி ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். அதைவிடுத்து பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கக் கூடாது.

பிரச்சினைகளுக்கு அரசால் தீர்வு காண முடியாவிடின் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் ஊடாக நீதியைப் பெற வேண்டும். இதில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது.

அண்மைக்காலங்களாக வடக்கு – கிழக்கில் இன, மத ரீதியிலான பிரச்சினைகள் திடீரென அதிகரித்துள்ளன. இதன் பின்னணி குறித்து நாம் ஆராய்ந்தபோது, மர்மமாகவே இருக்கின்றது.

உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும்; பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாகவுள்ளது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.