கர்நாடக தேர்தல்: 3 மணி நிலவரப்படி 52.18% வாக்குகள் பதிவு!

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. களத்தில் 2,615 வேட்பாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் மாநிலத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

பிற்பகல் 1 மணி வரை 37.25 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.