சைனஸ் என்றால் என்ன? இதற்கு எளிய முறையில் வீட்டு வைத்தியம் பற்றி தெரிந்துகொள்வோம் (Video)

சைனஸ் என்பது நோயின் பெயர் அல்ல, அது முகத்தின் மேல்பகுதியில் நான்கு ஜோடி காற்று பைகள் இருக்கும். அதாவது மூக்கின் 2 பக்கவாட்டிலும், கண்களுக்கு மேலே 2 ஜோடியாகவும், ஆக மொத்தம் 4 ஜோடி காற்று பைகள் காணப்படும். அந்த பைகளின் பெயர் சைனஸ் (Sinu) என்று அழைக்கப்படுகின்றது. நம் எல்லாருக்கும் இந்த சைனஸ் என்ற காற்று பைகள் கட்டாயம் இருக்கும். சைனஸ் என்ற பகுதி இல்லை என்றால், கழுத்து வலி அதிகமாகிவிடும். ஏனெனில் கழுத்தின் பின்புறம் மெல்லிய எலும்பு, தலையின் முழு எடையையும், தாங்குவதால் கழுத்து வலி வராமல் தடுக்க, முகத்தில் உள்ள 4 காற்று பைகள் மிக முக்கிய காரணமாயிருக்கின்றது.

அலர்ஜி
சைனஸ் (Sinu), மூக்கின் பக்கத்தில் இருப்பதால், மூக்கு வழியே அந்த காற்று பைகளில் வைரஸ், பாக்டீரியா தொற்று, தூசி நுழைவது, அலர்ஜி, ஏற்படும்போது, சளி திரவம், நீர்தேங்கி, மூக்கு உரிதல், மூக்கில் நீர்வடிந்து கொண்டே இருத்தல், தும்மல், தொடர் தும்மல், இரும்பல், ஜலதோஷம், தலைபாரம், முகத்தில் வீக்கம், புருவத்திற்கு இடையே வலி, மற்றும் குத்துதல் போன்ற உணர்வு, காதடைப்பு போன்ற பல பிரச்சனைகளை சைனசிடிஸ் (Sinusitis) என்று சொல்லப்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு அடிக்கடி, அல்லது நாள்பட்ட இப்பிரச்சினைகள் வந்து போகும். சைனசிடிஸ் (Sinusitis) பிரச்சனைகளுக்கு தீர்வு காண வீட்டிலேயே சில எளிய முறையில் பின்பற்றினாலே விரைவில் குணமடையலாம். என்ன என்ன வீட்டு வைத்தியம் செய்யலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

வீட்டு வைத்தியம்


பொதுவாகவே தலைபாரம், சளி, மூக்கொழுவதால், வந்தவுடனே ஆவி பிடிப்பது அதாவது நீராவி உள்ளிழுத்தல் (Steam Inhalation) செய்யவது வழக்கமான ஒன்றாகும். எப்படி நீராவி பிடிக்கவேண்டும் என்பதை கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டும், அப்படி செய்தால் மட்டுமே நல்ல தீர்வு கிடைக்கும்.

வெண்ணீரில் மஞ்சள், 2-3 சொட்டு யூகலிப்டஸ் ஆயில், அல்லது ஆவிபிடிக்கும் மருந்து கலந்து, நொச்சி இலை என்று எந்த பொருட்களையும் பயன்படுத்தலாம்.

ஆவிபிடிக்கும்போது வாய் வழியே உள்ளிழுத்தால் நூரையீரல் பகுதிக்கு போகும், அதனால் எந்த பலனும் கிடைக்காது, அப்படி செய்யக்கூடாது. மூக்கின் வழியே நன்கு புகையை உள்ளிழுத்து வாய் வழியே விடவேண்டும். இதை தொண்டர்ந்து 5-7 நிமிடம் செய்தால் கூட போதுமானது, மேலும் ஒரு நாளைக்கு 2-3 முறை வரை ஆவி பிடிக்கலாம். எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது சளி கரைந்து வெளியே வந்துவிடும்.

ஜல நெட்டி (Neti pot)


நெட்டி பானை, மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய ஒரு சிறிய பானை வடிவில் இருக்கும். இதில் லேசான சுடுநீரில் சிறிது உப்பு கலந்து, தலையை ஒரு பக்கமாக சாய்த்து தண்ணீரை ஒரு மூக்கின் வழியே விடவேண்டும்,

அது தானாகவே மற்றொரு மூக்கின் வழியாக வந்துவிடும். இப்படி செய்வதால், சளியை கரைத்து, வைரஸ், பாக்டீரியா தொற்று மற்றும் கிருமிகள், அழுக்குகள், ஆகிய எல்லவற்றையும் வெளியே எடுத்துவிடும். இந்த பயிற்சி அடிக்கடி செய்துவந்தால், நிரந்தரமாக குணமடையமுடியும்.

இதை தவிர உடல் உஷ்ணத்தால் வரக்கூடிய சளி தொந்தரவை சரிசெய்ய நல்லெண்ணையில் வெந்தயம், அல்லது நொச்சி இலை சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி, அந்த எண்ணையை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், உடல் சூடு தணிந்து, சைனசிடிஸ் (Sinusitis) பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

Leave A Reply

Your email address will not be published.