லிட்ரோ எரிவாயு விலை ரூ.452யால் குறைப்பு!

இன்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டர் 452 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை ரூ.3,186.
இதேவேளை, 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 181 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,281 ரூபாவாகும்.

2.3 கிலோ எடையுள்ள காஸ் சிலிண்டரின் விலை ரூ.83 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ.598.

Leave A Reply

Your email address will not be published.