வளர்த்த பசுவை கடித்தமைக்காக 15 நாய்களுக்கு விஷம் வைத்து கொலை – வவுனியாவில் சம்பவம்

தான் வளர்த்த பசு மாட்டை கடித்தமைக்காக 15 நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று வவுனியா – மாமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மாமடு பிரதேசத்திலுள்ள மக்கள் வழங்கிய முறைபாடுகளுக்கமைய 42 வயதுடைய இராணுவ வீரர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் அப்பகுதியில் பண்ணையொன்றை நடாத்தி வருவதுடன், அவரின் பசுவையும் அதன் கன்றுக்குட்டியையும் நாயொன்று கடித்து காயப்படுத்தியதனை அடுத்து குறித்த நபர் விஷம் கலக்கப்பட்ட இறைச்சியை 15 நாய்களுக்கும் கொடுத்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது பசுவையும் கன்றுக்குட்டியையும் நாயொன்று கடித்து காயப்படுத்தியதனை அடுத்து தான் கோபமடைந்தன் காரணமாகவே இக்கொடூர செயலை புரிந்ததாக கைது செய்யப்பட்ட நபர் பொலிஸாரின் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கைது செய்யப்பட்ட குறித்த நபர் பொலிஸாரினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.