அமெரிக்க தூதரக பணியாளருக்கு சிறைத்தண்டனை

துருக்கியின் முக்கிய நகரான இஸ்ரான்புல்லில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய உள்நாட்டு பணியாளர் ஒருவருக்கு கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் சிறைத் தண்டனைத் தீர்ப்பை துருக்கிய நீதிமன்றம் வழங்கியது.
கடந்த 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள ஆநவin வுழிரண என்ற உள்நாட்டுப் பணியாளருக்கு, 105 மாதங்கள் சிறைத் தண்டனைத் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.

துருக்கியின் அரசுத் தலைவர் ரெஷிப் ரெய்யீப் ஏர்டோகனின் அரசுக்கு எதிராக, 2016ம் ஆண்டு ஜூலையில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு சதிப்புரட்சியின் பின்னணியில் உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுவரும் அமெரிக்காவில் வசித்துவரும் ஃபெத்துல்லா குல்லர்ன் என்ற மதபோகரின் அனுசரணையில் செயற்பட்டுவரும் அமைப்புடன், இவருக்கு நேரடித் தொடர்பு காணப்பட்டதாக அவரது தொலைபேசி அறிக்கை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் தனது கடமை நிமிர்த்தம் காவற்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அப்போது உயர்பதவியில் இருந்தவர்களுடன் தான் தொடர்புகளை பேணியதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதேவேளை, துருக்கிய நீதிமன்றத் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் அளிப்பதாக இக்கைதுக்கு எதிராக கருத்துத் தெரிவித்துவரும் அமெரிக்க தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு ஜூலையில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு சதிப்புரட்சியில் சுமார் 250 பேர் வரை உயிரிழந்ததுடன், உயர்நிலைப் படையதிகாரிகள் உட்பட சுமார் 1400 பேர் வரை கைது செய்யப்பட்டும் உள்ளனர்.
இச்சதிப்புரட்சியின் பின்னணியாக குற்றம் சுமத்தப்பட்டுவரும் துருக்கியைச் சேர்ந்த மதகுரு ஃபெத்தெல்லா குல்லர்னை நாடு கடத்தும் படி ஏர்டோகனின் அரசு, தொடர்ந்தும் அமெரிக்கா மீது அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.