திருச்சியில் , சண் தவராஜாவின் காணாமல் போனவர்கள்

இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியீடான சுவிட்சர்லாந்த் எழுத்தாளர் சண் தவராஜாவின் காணாமல் போனவர்கள்  சிறுகதை நூல் அறிமுக விழா திருச்சியில் 07-06- 2023 அன்று மாலை பிரீஸ் ரெசிடென்சியில் சிறப்பாக நடைபெற்றது.

இனிய நந்தவனம் கௌரவ ஆலோசகரும், ஸ்ரீரங்கம் நகர நலச்சங்க செய்தித் தொடர்பாளருமான மேஜர் டோனர் டாக்டர் கே.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வி.ஜி.பி நிறுவவனம் திருச்சிக் கிளைத்தணைத்தலைவர் இரா.தங்கையா, ரோட்டரி உறுப்பினர் சேர்க்கை செயலாளர் சோ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்

மருத்துவர் செந்தில் நல்லசாமி, ஸ்ரீசிவநாதன் சிட்ஸ் (பி) லிட்இயக்குனர் பி.டெரன்ஸ் பிலிப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள, கவிஞர் ம.திருவள்ளுவர் நூலாய்வு செய்தார்.

முன்னதாக அனைத்துலகத் தமிழ்மாமன்றத் தலைவர் வே.த.யோகநாதன் அனைவரையும் வரவேற்க, இனிய நந்தவனம் பதிப்பாசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் நூலாசிரியர் குறித்து அறிமுகவுரையாற்றினார். இனிய நந்தவனம் மக்கள் தொடர்பாளர் பா.தனபால் நன்றி கூறினார் நிகழ்வில் எழுத்தாளர்களும், பத்திரிக்கையாளர்களும், இலக்கிய ஆர்வலர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.