மணிப்பூரில் தொடரும் பதற்றம்…இணைய சேவை முடக்கம் நீடிப்பு…!

மணிப்பூரில், பழங்குடியினர் அல்லாத பெரும்பான்மை கொண்ட மெய்தி மக்களுக்கும், பழங்குடியினரான குக்கிகள், நாகாக்கள் என இரண்டு சமூகத்தினரிடையே வன்முறை வெடித்தது. மெய்தி சமூகத்திற்கு, பட்டியல் பழங்குடியின இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து குக்கி சமூக மக்கள் நடத்திய போராட்டம் இரு தரப்புக்கும் இடையே பெரும் வன்முறையாக மாறியது.

இந்த வன்முறைச் சம்பவங்களில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 300க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மே 29 முதல் ஜூன் 1 வரை மணிப்பூர் மாநிலத்திற்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஆளுநர் தலைமையில் அமைதி குழு ஒன்றை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மணிப்பூரில் பதற்றமான தொடர்வதால் அங்கு மத்திய ஆயுத படையான CAPF பாதுகாப்பு ஜூன் 30ஆம் தேதி வரை நீடித்து மத்திய உள்துரை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மொத்தம் 114 கம்பெனி CAPF படைகள் மணிப்பூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

இதுவரை பாதுகாப்பு படையினர் 953 ஆயுதங்கள், 225 வெடிகுண்டுகளை வெற்றிகரமாக பறிமுதல் செய்துள்ளனர், ஆனால் திருடப்பட்ட ஆயுதங்களில் இது வெறும் 25 சதவீதம் கூட இல்லை என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் சிபிஐ அதிகாரிகளும் பல இடங்களில் ஆய்வு செய்து விசாரணை நடத்தவுள்ளனர்.

மணிப்பூரில் கடந்த மே 3ஆம் தேதி இல் இருந்த இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதை மேலும் 5 நாள்கள் அதாவது ஜூன் 15ஆம் தேதி நண்பகல் 3 மணி வரை இணைய சேவை ரத்து நடவடிக்கை தொடரும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.