பெண்கள் பாதுகாப்பு இல்லத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்.

பெண்கள் பாதுகாப்பு இல்லத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்
பெண்கள் பணியகம் மற்றும் UNFPA இணைந்து  முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள வட்டுவாகல் தற்காலிக பெண்கள் பாதுகாப்பு இல்லத்தின் தற்போதய நிலைமைகள் தொடர்பாக ஆராயும் கூட்டமானது மாவட்ட செயலாளர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் 10.09.2020 வியாழக்கிழமை  இடம்பெற்றுள்ளது.
மேற்குறித்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களுக்கான தேவைப்பாடுகள் மற்றும் வட்டுவாகல் தற்காலிக பெண்கள் பாதுகாப்பு இல்லத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
மேலதிக மாவட்ட செயலாளர், இலங்கை பெண்கள் பணியக  பணிப்பாளர் சம்பா உபசேன, உதவி மாவட்ட செயலாளர், UNFPA பிரதிநிதிகள், JSAC பிரதிநிதிகள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உதவியாளர், மாவட்ட மற்றும் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உதவியாளர்,  பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வட்டுவாகல் தற்காலிக இல்ல உத்தியோகத்தர்கள் என பல்வேறு துறையினர் கலந்து கொண்டார்கள்.
மேலும் இக் குழுவினர் வட்டுவாகல் தற்காலிக பெண்கள் பாதுகாப்பு இல்லத்தினை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.