Online இல் உலாவரும் புதிய பிரமிட் திட்டத்தால் நீங்களும் பாதிப்படையலாம் கவனம்!

அதிக வேலைப்பளு இல்லாமல் கைநிறைய சம்பாதிக்கும் முறை ஒன்று உள்ளது இணைகிறீர்களா? இவ்வாறு யாரும் உங்களை அணுகிய அனுபவம் உண்டா?

இலங்கையில் பிரமிட் திட்டங்கள் தடைசெய்யப்பட்டவை என்பதை எம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? பலர் தெரிந்தும் சிலர் தெரியாமலும் இந்த வலைக்குள் தினம் தினம் விழுந்து கொண்டு தான் இருக்கிறோம்.

பிரமிட் திட்டம் என்றால் என்ன? எவ்வாறு செயற்படுகின்றது

ஒரு திட்டத்தில் நாம் குறித்தளவு பணமுதலீடு செய்து இணைந்து அதில் மற்றவர்களை இணைப்பதன் மூலம் ஒரு பங்கு வருமானத்தையும் பெறுவோம், இதில் புதிதாக இணையும் நபரும் குறித்த முதலீட்டினை மேற்கொண்டு அவருக்கு கீழ் மேலும் சிலரை இணைப்பார் இதற்கு அவருக்கும் அவரை இணைத்தவருக்கும் ஒரு விகித வருமானம் கிடைக்கும். முதல் நபர் இருவரை சேர்க்க அவர்கள் தலா நால்வரை சேர்க்க என காலப்போக்கில் இதன் சங்கிலி வடிவான கட்டமைப்பு வளர்ந்து செல்கின்றது. பிரமிட் வடிவத்தை ஒத்திருப்பதால் இது பிரமிட் திட்டம் என்று அழைக்கப்படுகின்றது.

இது தற்போதைய காலத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு online மூலம் உலாவருகின்றது சிலர் இதில் ஈடுபட்டும் வரலாம் இந்தமுறை smartphone ஏற்ப வடிவமைத்துள்ளனர் குறிப்பிட்ட App யை phone இல் installed பண்ண வேண்டும் பின்னர் குறிப்பிட்ட கம்பனியின் வங்கிக்கணக்கிற்கு 2500 முதல் 100,000 வரை வைப்புச்செய்ய வேண்டும் பின்னர் நீங்கள் online இல் பொருள் கொள்வனவிற்கான கட்டளையை இடும்போது உங்கள் கணக்கில் points வரும் அதனை phone இல் காட்டுவார்கள் வைப்புத் தொகை வேறுபட்டுக் கேற்ப கட்டளை பொருட்களின் பெறுமதி வேறுபடும்.
நீங்கள் செய்வது phone இல் order விடுவது மட்டுமே உங்கள் வைப்பு பணத்திலும் points கூடும் போது அதனை online ஊடாக உங்கள் வங்கிகணக்கிற்கு மாற்றமுடியும்.

அது சரி ஏன் பிரமிட்டாக இது கருதப்படுகின்றது.

1)புதிதாக இணைபவர் இத்திட்டத்தில் ஏற்கனவே உள்ளவரின் தொடர்பூடாக இணைக்கப்படுகன்றார்

2)புதியவர்க்கு points கிடைக்கும் போது அவரை இணைத்தவருக்கும் points கிடைக்கும்.

3)முதலில் இணைந்தவர்களுக்கு கூடிய points கிடைக்கும்

எனவே இது ஒர் பிரமிட் திட்டம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இலங்கை வங்கிசட்டம் 1988 இல 30 இன் படி ‘பணம் அல்லது பணத்துக்கு சமானமான முதலீடுகளை மேற்கொண்டு அங்கத்தவர்கள் ,மேலதிக அங்கத்தவர்களை இணைத்தல் மற்றும் அங்கத்தவர்களின் பங்களிப்பு பெறுமதியை அதிகரித்தல் போன்ற எந்த ஒரு திட்டத்தையும் எந்தவொரு நபரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடங்குதல், வழங்குதல், விளம்பரப்படுத்தல், நிதியளித்தல், நிர்வகித்தல் அல்லது இயக்குதல் போன்றவற்றை செய்ய முடியாது என்ற ரீதியில் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது இச் சட்டத்தை மீறினார் என ஒருவர் நிரூபிக்கப்படுமிடத்து 1000000 /= க்கு குறைந்த தண்டப்பணமும் மூன்று வருடங்களுக்கு குறையாத சிறை தண்டனையும் வழங்கப்படும்.

அத்துடன் இச்சட்டம் இணைபவரையும் சாரும் என தெரிந்தே இதனை செய்பவர்களுக்கு மூன்று வருடத்திற்கு குறையாத 5 வருடங்களிற்கு மேற்படாத கடுங்காவல் தண்டனையும் 2000000 ரூபாய்களுக்கு குறையாத அல்லது அங்கத்தவர்களின் முதலீட்டு மதிப்பீட்டு தொகைக்கு இரு மடங்கான தொகை இரண்டில் பெரிய தொகையினை செலுத்த வேண்டும்.

அத்துடன் மேற்குறித்த சட்ட அத்துமீறல் ஆனது “சட்டவிரோத நடவடிக்கை” என பணமோசடி தடுப்புச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி இவ்வாறான திட்டங்கள் மூலம் வருமானம் ஈட்டியவரின் நிதி , பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி சட்டத்தின் மூலம் பறிமுதல் செய்யப்படும்.

உங்களுடைய பணத்தையும் காத்து மானத்தையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

பாமர மக்களைவிட படித்தவர்களை இலக்காக கொண்டு இது உலாவருகின்றது பல அரசாங்க அலுவலகங்களில் நல்ல வேகமெடுப்பதாக அலுவலக தகவல்கள் கூறுகின்றன. உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

Leave A Reply

Your email address will not be published.